Friday, May 23, 2008

ராமதாஸ், அமைச்சர் பொன்முடி பேட்டி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மே 24-ஆம் தேதி தைலபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். ஒசூரில் கள்ளச்சாராய சாவு பின்னணியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. (மற்றவை பிறகு)

தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். (மற்றவை பிறகு)

Sunday, May 18, 2008

ரத்த தானம் தருவதற்கு "ஆள் பிடிக்கும் திட்டம்'

சென்னை, மே. 17: ராஜீவ் காந்தி நினைவு தினத்தன்று ரத்த தானம் செய்வதற்கு ஆள் கிடைக்காமல் போய்விடுமோ என்று காங்கிரஸ் கட்சியினர் அச்சப்ப டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் ஆள் பிடிக்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 21-ஆம் தேதி ராஜீவ் காந் தியின் நினைவு நாள் வருகிறது. அதற் காக மாநிலம் முழுக்க ரத்த தானம், ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகள் செய்து வரு கின்றனர்.வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராயபுரம் ஆர். மனோ தலைமையில் நடக்க உள்ள ரத்த தான நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன் தண் டையார்பேட்டையில் தொடக்கி வைக் கிறார்.

அதற்காக ஒட்டப்பட்டுள்ள சுவ ரொட்டிகளில் (படம்) 10 பேரை ரத்த தானத்துக்கு அழைத்து வந்தால் ஒரு கிராம் தங்க நாணயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திர மாகத் திகழ்ந்தவர் ராஜீவ் காந்தி. இப் போது அவருடைய குடும்பத்தினரின் பெயரைச் சொல்லித்தான் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் நடத்த வேண்டியி ருக்கிறது.

சொந்த செல்வாக்கில் அரசி யல் நடத்தும் காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.ராஜீவ் நினைவு நாளில் நிறைய பேரை வரவழைத்து ரத்த தானம் செய் தோம் என்று மேலிடத்தில் கூறி, இப் போதைக்குப் பாராட்டையும், எதிர்கா லத்தில் "வேறு ஆதாயங்களையும்' பெறும் நோக்கில், அதிகமான பேரை அழைத்து வருவதற்கு முயற்சி நடக்கி றது.10 பேரை அழைத்து வந்தால் தங்கக் காசு பரிசு தருவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, காசு கொடுத்து ரத்தம் வாங் குவதைப் போல அமைந்துள்ளது என கட்சியினர் குமுறுகின்றனர்.

ராஜீவின் பெயருக்கு உள்ள செல் வாக்கை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.இதேபோல வடசென்னை பகுதியில் காங்கிரஸ் கட்சியில் புதிதாக யாரும் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என் பதற்காக, காவல் துறையினர் உதவியு டன் குறிப்பிட்ட சிலர் மறைமுக செயல் களில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது.தன்னைத் தவிர வேறு யாருக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்று காவல் துறை மூலம் சிலர் தடுப்பதாகவும் சொல்லப்படுகி றது. கட்சி வளர்ச்சிக்கு எதிரான இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மேலிடத்துக்குக் கோரிக்கைகள் வைக் கப்பட்டுள்ளது என்றும் சொல்லப் படுகிறது.

ரூ. 49-ல் பூஸ்டர் ரீசார்ஜ்: பி.எஸ்.என்.எல். அறிமுகம்

சென்னை, மே. 17: ப்ரீபெய்டு செல்போன் இணைப்புகளுக்கான புதிய பூஸ்டர் ரீசார்ஜ் கூப்பன்களை பி.எஸ்.என்.எல்.நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ரூ. 49 விலையில் கிடைக்கும் இந்த கூப் பன்களை பொதுவான ப்ரீபெய்டு, வாழ் நாள் திட்ட ப்ரீபெய்டு, சுமோ, சுமோ பிளஸ், சுமோ மேஜிக், ஒண்டர், ஒண்டர் பிளஸ் இணைப்புகளை ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல். தொலைபேசிகளுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 50 பைசா வும், மற்ற நெட்ஒர்க்கை சேர்ந்த போன்க ளுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 60 பைசாவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. பி.எஸ்.என்.எல்.-ன் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்கள், விற் பனை மையங்களில் இந்த கூப்பன் கிடைக் கும் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறி வித்துள்ளது

வேண்டுமென்றே குற்றம் கூறுகிறார்!

சென்னை, மே. 17: தமிழகத்தில் உயர் கல்வித் துறையில் கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு பணிகள் நடந்துள்ள போதிலும், இத் துறை மீது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுமென்றே குற்றம் சொல்வதாக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார்.

தமக்கு, ""கூட இருந்தே குழி பறிப்பவர்களின் தோழமைதான் கிடைத்திருக்கிறது'' என்று முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் அளித்த ராமதாஸ், குறைகளைச் சுட்டிக் காட்டினால் ""குழி பறிக்கிறோம்'' என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். உயர் கல்வித் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டக் கூடாதா என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்குப் பதில் அளித்துள்ள பொன்முடி, "ஒரு உருண்டை சோற்றில் பூசணிக் காயை மறைக்க முயற்சிப்பதாக' கூறியுள்ளார்.சட்ட சிக்கல்களைச் சமாளித்து தொழிற் கல் லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலம் கிராமப்புற மாணவர்கள் 43.9 விழுக்காடு அளவுக்குக் கூடுதலாகப் பயன் பெற்றது, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் அளவை 50 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக உயர்த்தியதால் பல்லாயிரக்கணக் கான பேருக்கு பயன் கிடைத்தது ஆகியவற்றை பொன்முடி நினைவுபடுத்தியுள்ளார்.

மேட்டூர், குளித்தலை உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக அரசுக் கல்லூரிகள் தொடக்கம், அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக் கடன் ரத்து, சுயநிதிப் பாடப் பிரிவுக்கான கட்டணம் குறைப்பு, அரசு பொறியியல் கல்லூரிக் கட்டணம் ரூ.12,550- ல் இருந்து ரூ.7,550 ஆகக் குறைப்பு போன்றவை ராமதாஸýக்குத் தெரியாதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த ஆண்டு கல்லூரிக் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதால் 3.74 லட்சம் பேர் பயன் பெற்றனர்.இந்த ஆண்டு பாலிடெக்னிக்குகளுக்கும் இந்த உதவி வழங்கப்படுவதால் 25 ஆயிரம் பேர் பயன் பெறுவர்.

கெüரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம், அண்ணா பல்கலைக்கழகம் பரவலாக்கம், இந்த ஆண்டில் திண்டிவனம், அரியலூர் உள்ளிட்ட 6 பொறியியல் கல்லூரிகள் மூலம் 1440 பேர் பயன் பெறும் வாய்ப்பு ஆகியவற்றையும் பொன்முடி பட் டியலிட்டுள்ளார்.தமிழகத்தில் ஐந்து அரசுக் கல்லூரிகளைப் பல்க லைக்கழகமாக மாற்றும் திட்டத்தை விட்டுவிட்டு, இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக் குவதில் அவசரம் காட்டுவதாக ராமதாஸ் கூறியுள் ளார். அதில் 4 கல்லூரிகள் ஒருமைப் பல்கலைக்கழ கமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு நடவ டிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக "கல்வியியல் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்டிருக்கிறது.இந்தப் பல்கலைக்கழகங்கள் குறித்து சில சங்கங் களும் அரசியல் கட்சிகளும் கருத்துகளைக் கூறி யுள்ளன.இவற்றுக்கு அரசின் நிதி வராது என்று சொல் வது தவறு. அரசின் நிதி நிறுத்தப்படாது. பல்க லைக்கழக மானியக் குழுவின் நிதியும் கிடைக்கும்.இதனால் மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்பு பெருகும் என பொன்முடி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்ப டியும், கல்வித் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் நிலையை மேம்படுத்தவும், தேசிய அறிவுசார் ஆணையக் கருத்தின்படியும் 7 புதிய பல்கலைக்ழகங் கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இவற்றின் நிறைகுறைகளைப் பற்றி ஆர்வம் உடையவர்களுடனும் சட்டமன்ற ஆய்வுக் குழுவு டனும் அரசு விவாதித்து விரைவில் நடைமுறைப்ப டுத்த நடவடிக்கை எடுக்கும் என பொன்முடி கூறி யுள்ளார்.