Saturday, June 21, 2008

கொலை முயற்சி உண்மையா? இல்லையா?

கொலை முயற்சி உண்மையா? இல்லையா?
பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் முதல்வர் கருணா நிதியும் சொல்வதில் நியாயம் இருக்கிறதா? காடுவெட்டி குரு மத்திய அமைச்சரையும் சட்டமன்ற உறுப்பினரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிப் பேசியது உண்மைதான் என்று ராமதாஸும் முதல்வரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அது தன்னுடைய தன்மானத்துக்கு இழுக்கு என்று முதல்வர் சொல்கிறார். குரு பேசியதில் தவறு இல்லை என்று ராமதாஸ் சொல்கிறார். ஒரு மந்திரியைக் கொல்வேன் என்று பேசுவது தப்பில்லை என்று சொல்வது நியாயமா என்பதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை. முடிந்து போன விஷயம் என்று சொல்கிறார்.பக்கத்து வீட்டுக்காரனை வெட்டுவேன் என்று சொன்னாலே போலீஸ் கைது செய்து பொளந்துடுவாங்க. மந்திரியை வெட்டுவேன் என்று சொன்னது தப்பில்லையாம். இது என்ன நியாயம்? ராமதாஸுக்கு தனி நீதியா? இதுதான் இந்த ஆட்சியில் இதுவரை நடந்ததா? அப்ப கூட்டணிக் கட்சிக்காரன் கொலை செய்தாலும் முதல்வர் கண்டுக்கமாட்டாரா?இப்பகூட இன்னும் குரு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. சாமானியனுக்கு ஒரு நீதி ராமதாஸுக்கு ஒரு நீதியா?முதல்வரின் போலீஸ் துறையின் நடுவு நிலைமை லட்சணம் இதுதானா?இதை மக்கள் கண்டுகொள்ளக் கூடாது என்று முதல்வர் எதிர்பார்க்கிறாரா?
எல்லோருக்கும் சம நீதி கிடைக்காதா?இதுவே அந்தம்மா ஆட்சியா இருந்தா எவனாவது இப்படி பேசிட்டு தப்பிக்க முடியுமா? போலீஸ் துறை இனியாவது நடவடிக்கை எடுக்குமா?

Thursday, June 5, 2008

அத்வானியைப் பிரதமராக்க சிதம்பரம் சதியா?

அத்வானியை பிரதமராக்குவது என்பதில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் உறுதியாக இருக்கிறார் போலும். பெட்ரோல் விலை உயர்வுக்கு என்னதான் நியாயமான காரண்ங்கள் சொன்னாலும் மக்கள் அதை ஏற்கப் போவதில்லை. பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.2, எல்.பி.ஜி. சிலிண்டருக்கு ரூ.50 என்ற விலை உயர்வு சாதாரண மக்களை ரொம்பவுமே பாதிப்பதாக இருக்கும். இதனால் காய்கறி, ஸ்கூல் பஸ் வேன் ஆட்டோ என எல்லா கட்டணங்களுமே ஏறிவிடும். இந்தக் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனாலும் இதைத் தவிர்த்திருக்கலாம் என்றுதான் அவை எல்லாமே சொல்லும்.
அது மட்டுமல்ல. பொது நிதி அமைப்பு ஒன்றை தொடங்கினால் இதுபோன்ற் விலை உயர்வுகளைத் தவிர்க்கலாம் என்று இடதுசாரிக் கட்சிகள் சொல்கின்றன. அதுபற்றி ஆளும்கட்சி எந்தக் கருத்துமே சொல்லவில்லை. அது ஏன் என்பதும் தெரியவில்லை. அதில் என்ன குறை என்றவாது அரசாங்கம் சொல்லலாமே.அப்படி ஏதும் சொல்லாத காரணத்தால் இடதுசாரிக் கட்சிகளின் வாதம் வலுப் பெறுகிறது அல்லவா?பெட்ரோல் விலை உயர்வுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சாவு மணியாக அமையப்போகிறது என்று பா.ஜ.க. தலைவர் அத்வானிகூட சொல்லி இருக்கிறார்.
இதே நிலை நீடித்தால் அத்வானி பிரதமர் ஆவதற்கு அழைப்பு மணியாகவும் இது அமையும். அத்வானி பிரதமர் பதவி ஏற்றால் அவரும் பா.ஜ.க.வும் சிதம்பரத்துக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பணத்தைக் கையால் தொட்டுப் பார்த்திராதவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் என்னவாகும் என்பதை பின்னால் வரும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக் கொள்வதற்கு சிதம்பரம் நல்ல உதாரணமாக இருப்பார்.

Wednesday, June 4, 2008

சர்தார்ஜியின் தமிழ் படிக்கும் ஆசை

பஞ்சாப்காரர் ஒருவர் மருத்வமனயில் சேர்க்கப்பட்டிருந்தார். பேசக் கூடிய நிலயில் இருந்தாலும், அதிகநாள் வாழ மாட்டார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இருந்தாலும் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார்.
எதற்காகத் தமிழ் கற்க விரும்புகிறீர்கள்?ÕÕ என டாக்டர்கள் கேட்டனர்.
சொர்க்கத்தில் அந்த மொழிதான் பேசுகிறார்களாம். அதனால் அங்கு மொழி தெரியாமல் நான் திணறக் கூடா அல்லவா? - என்றார் அந்த புத்திசாலி.
அ சரி. நீ சொர்க்கத்க்குத்தான் போவாய் என்று எப்படி சொல்ல முடியும்? ஒருவேள நரகத்க்குப் போய்விட்டால் என்ன செய்வாய்? - என டாக்டர் மடக்கினார்.
அதொன்றும் பிரச்சின இல்ல. எனக்கு இந்தி சரளமாகப் பேசத் தெரியும் என்றார் பஞ்சாபி.

ராமர் பாலத்துக்கு தனி நீதியா?

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருக்கிறார்கள். கடலுக்கு அடியில் இருக்கும் மணல் திட்டுகள் ராமர் கட்டிய பாலம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். அது வழிபடக் கூடிய இடமா என்று உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. உடனே அங்கு வழிபாடு நடத்தப் போகிறோம் என்று ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கிறது. ஒரு ஊர் மக்கள் சேர்ந்து கொண்டு தஙகள் ஊரில் ஒரு பண்ணையாரின் கட்டடத்தை நாங்கள் வழிபடுகிறோம் என்று சொன்னால் அதை அரசாங்கம் கையகப்படுத்தமால் விட்டுவிடுமா? திடீரென ஒரு வழிபாட்டு இடம் வந்துவிடுமா? அப்படியனால் பாபர் மசூதிக்கு அது ஏன் பொருந்தாமல் போய் விட்டது? ஓட்டு வாங்குவதற்காக சிலர் வேண்டுமென்றே ராமர் பாலம் பிரச்சினையை எழுப்புகிறார்கள்.
பாபர் மசூதிக்குப் பொருந்தாத நீதி மணல் திட்டுக்கு மட்டும் பொருந்துமா? தமிழக மக்களிடம் இந்தப் பிரச்சினை எடுபடவில்லை என்பதில் இருந்தே மதவாதிகள் புரிந்துகொள்ள வேண்டாமா?அவர்களுக்குப் புரியும். ஆனால் புரியாதது போல நடிக்கிறார்கள். வட மானிலங்களில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக் இப்படி செய்கிறார்கள்.
இந்த சூது எண்ணத்தை மக்கள் புரிந்து கொள்ள் வேண்டும்.

Tuesday, June 3, 2008

டாட்டா நிறுவனம் நல்லதா?

டாட்டா நிறுவனம் சத்தான்குளம் பகுதியில் தொழிற்சாலை தொடங்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்வது சரியா என்று பத்திகைகள் யோசிக்க வேண்டும். இங்கு உற்பத்தியகும் பொருள் அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் என்று சொல்வதால் இதை ராணுவமே செய்யலாமே? அதுதான் நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதாக இருக்கும். இதை ஏற்பதில் அரசுக்குத் தயக்கம் இருக்கக் கூடாது. சில பத்திரிகைகள் ஏன் டாட்டாவுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன? மக்களைப் பற்றி கவலைப் படுவதே இல்லையா

Friday, May 23, 2008

ராமதாஸ், அமைச்சர் பொன்முடி பேட்டி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மே 24-ஆம் தேதி தைலபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். ஒசூரில் கள்ளச்சாராய சாவு பின்னணியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. (மற்றவை பிறகு)

தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். (மற்றவை பிறகு)

Sunday, May 18, 2008

ரத்த தானம் தருவதற்கு "ஆள் பிடிக்கும் திட்டம்'

சென்னை, மே. 17: ராஜீவ் காந்தி நினைவு தினத்தன்று ரத்த தானம் செய்வதற்கு ஆள் கிடைக்காமல் போய்விடுமோ என்று காங்கிரஸ் கட்சியினர் அச்சப்ப டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் ஆள் பிடிக்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 21-ஆம் தேதி ராஜீவ் காந் தியின் நினைவு நாள் வருகிறது. அதற் காக மாநிலம் முழுக்க ரத்த தானம், ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகள் செய்து வரு கின்றனர்.வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராயபுரம் ஆர். மனோ தலைமையில் நடக்க உள்ள ரத்த தான நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன் தண் டையார்பேட்டையில் தொடக்கி வைக் கிறார்.

அதற்காக ஒட்டப்பட்டுள்ள சுவ ரொட்டிகளில் (படம்) 10 பேரை ரத்த தானத்துக்கு அழைத்து வந்தால் ஒரு கிராம் தங்க நாணயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திர மாகத் திகழ்ந்தவர் ராஜீவ் காந்தி. இப் போது அவருடைய குடும்பத்தினரின் பெயரைச் சொல்லித்தான் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் நடத்த வேண்டியி ருக்கிறது.

சொந்த செல்வாக்கில் அரசி யல் நடத்தும் காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.ராஜீவ் நினைவு நாளில் நிறைய பேரை வரவழைத்து ரத்த தானம் செய் தோம் என்று மேலிடத்தில் கூறி, இப் போதைக்குப் பாராட்டையும், எதிர்கா லத்தில் "வேறு ஆதாயங்களையும்' பெறும் நோக்கில், அதிகமான பேரை அழைத்து வருவதற்கு முயற்சி நடக்கி றது.10 பேரை அழைத்து வந்தால் தங்கக் காசு பரிசு தருவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, காசு கொடுத்து ரத்தம் வாங் குவதைப் போல அமைந்துள்ளது என கட்சியினர் குமுறுகின்றனர்.

ராஜீவின் பெயருக்கு உள்ள செல் வாக்கை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.இதேபோல வடசென்னை பகுதியில் காங்கிரஸ் கட்சியில் புதிதாக யாரும் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என் பதற்காக, காவல் துறையினர் உதவியு டன் குறிப்பிட்ட சிலர் மறைமுக செயல் களில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது.தன்னைத் தவிர வேறு யாருக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்று காவல் துறை மூலம் சிலர் தடுப்பதாகவும் சொல்லப்படுகி றது. கட்சி வளர்ச்சிக்கு எதிரான இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மேலிடத்துக்குக் கோரிக்கைகள் வைக் கப்பட்டுள்ளது என்றும் சொல்லப் படுகிறது.