Thursday, June 5, 2008

அத்வானியைப் பிரதமராக்க சிதம்பரம் சதியா?

அத்வானியை பிரதமராக்குவது என்பதில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் உறுதியாக இருக்கிறார் போலும். பெட்ரோல் விலை உயர்வுக்கு என்னதான் நியாயமான காரண்ங்கள் சொன்னாலும் மக்கள் அதை ஏற்கப் போவதில்லை. பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.2, எல்.பி.ஜி. சிலிண்டருக்கு ரூ.50 என்ற விலை உயர்வு சாதாரண மக்களை ரொம்பவுமே பாதிப்பதாக இருக்கும். இதனால் காய்கறி, ஸ்கூல் பஸ் வேன் ஆட்டோ என எல்லா கட்டணங்களுமே ஏறிவிடும். இந்தக் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனாலும் இதைத் தவிர்த்திருக்கலாம் என்றுதான் அவை எல்லாமே சொல்லும்.
அது மட்டுமல்ல. பொது நிதி அமைப்பு ஒன்றை தொடங்கினால் இதுபோன்ற் விலை உயர்வுகளைத் தவிர்க்கலாம் என்று இடதுசாரிக் கட்சிகள் சொல்கின்றன. அதுபற்றி ஆளும்கட்சி எந்தக் கருத்துமே சொல்லவில்லை. அது ஏன் என்பதும் தெரியவில்லை. அதில் என்ன குறை என்றவாது அரசாங்கம் சொல்லலாமே.அப்படி ஏதும் சொல்லாத காரணத்தால் இடதுசாரிக் கட்சிகளின் வாதம் வலுப் பெறுகிறது அல்லவா?பெட்ரோல் விலை உயர்வுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சாவு மணியாக அமையப்போகிறது என்று பா.ஜ.க. தலைவர் அத்வானிகூட சொல்லி இருக்கிறார்.
இதே நிலை நீடித்தால் அத்வானி பிரதமர் ஆவதற்கு அழைப்பு மணியாகவும் இது அமையும். அத்வானி பிரதமர் பதவி ஏற்றால் அவரும் பா.ஜ.க.வும் சிதம்பரத்துக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பணத்தைக் கையால் தொட்டுப் பார்த்திராதவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் என்னவாகும் என்பதை பின்னால் வரும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக் கொள்வதற்கு சிதம்பரம் நல்ல உதாரணமாக இருப்பார்.

0 comments: